பாஸ்கா நான்காம் ஞாயிறு (30-04-2023)
வாசகங்கள் முதல் வாசகம் : திருத்தூதர் பணிகள் 2:14, 36-41 இரண்டாம் வாசகம் : 1 பேதுரு 2:20-25 நற்செய்தி வாசகம் : யோவான் 10:1-10 திருப்பலி முன்னுரை இணைந்திருப்பதே வாழ்வின் முதிர்ச்சி, இணைந்திருப்பதே வாழ்வில் மகிழ்ச்சி என்றும் இறைவனோடு இணைந்து வாழ இறை ஆசீர் பெற இறையில்லம் நாடி வந்திருப்போருக்கு வாழ்த்துக்கள். இணைந்த வாழ்வு என்பது என்றும் பிரியாத வாழ்வு. பிறரை ஏற்றுக்கொண்டு விட்டுக்கொடுத்து வாழ்வது. இணைந்த பயணத்தின் வழியே இலக்கை அடைவது. தந்தையும் இயேசுவும் ஒன்றாய் இருப்பது போல நாமும் சமூகத்தின் பிற மக்களோடு இணைந்து வாழ வேண்டும். இதையே இறைமகன் இயேசுவும் விரும்புகிறார். இதனாலேயே திருத்தூதர்களை ஏற்படுத்தி அவர்களை பிற இனத்தாருக்கு நற்செய்தி பணியாற்ற பணிக்கிறார். மனம் மாறி நற்செய்தியில் நம்பிக்கை கொண்டு இறை பாதம் சரணாக வேண்டும். புதுவாழ்வு வாழ நற்செய்தி துணை புரியும் என்ற உண்மை புலப்படும். தினமும் இறை அன்பில் புது உயர்வு காண உள்ளம் ஏங்கும். உறவின் மூலம் நம்மை உருவாக்கிய இ...









